பெலியத்த பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் சிறுமி, மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலியத்த – திஹலுவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கட்டுபெத்த மற்றும் பிங்கிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 – 49 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 500 ரூபா நாணயத்தாள்கள் 18 , 1000 ரூபாய் நாணயத்தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

