எம்.சி.சி, எக்ஸா மற்றும் சோபா ஒப்பந்தங்கள் குறித்து இரு நாள் விவாதம் அவசியம் – சாந்த பண்டார

320 0

மிலேனியம் செலேன்ஜ் கோப்ரேஸன், எக்ஸா மற்றும் சோபா ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதத்தை முன்னெடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பை அறிய நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார சபநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுனவின் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பு மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.அனைத்து மக்களுக்கும் இவ்வாறு தெரிவிப்பது கடினம் என்பதினால் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்காவது இது தொடர்பில் அறியப்படுத்த வேண்டும்.

இதனால் இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக இரு நாட்கள் விவாதங்களை நடாத்துவதற்கும், வாக்கெடுப்பை நடத்தி உறுப்பினர்களின் விருப்பு வெருப்புகளை கண்டறிவதற்கும் சபாநாயகர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.