பெரு மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்குத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

470 0

‘மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது.’

-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் –

சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்!

மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கு எமது பணிவன்பான வணக்கம்.

சுவிஸ் நாட்டில் வாழ்கின்ற மாவீரர் குடும்ப உறவுகளால் தரப்பெற்ற மாவீரர் திருவுருவப்படங்கள் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வணக்கத்திற்கு வைப்பதற்கான ஒழுங்குகளை தமிழர் நினைவேந்தல் அகவம் முன்னெடுத்து வருகின்றது.

சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்ற போதும் இதுவரை காலமும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் விபரங்களைப் பதிவுசெய்யாதவர்களும், ஏற்கனவே பதிவு செய்திருந்த போதும் எமது தொடர்புகள் கிடைக்கப் பெறாதவர்களும் எம்மோடு தொடர்புகொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

18.05.2009 இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் உறுதிசெய்யப்பெற்ற மாவீரர் திருவுருவப்படங்களை மாவீரர் பெயர், இயற்பெயர், வீரப்பிறப்பு, வீரச்சாவு, சொந்தமுகவரி, வீரச்சாவு நிகழ்ந்த சம்பவம் என்பவற்றுடன் சுவிஸ் நாட்டில் வாழும் உறவினரின் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மாவீரருடனான உறவுமுறை என்பவற்றைக் குறிப்பிட்டு வசகளறளைளளூபஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது வுயஅடையச சுநஅநஅடிசயnஉந குழரனெயவழைn – ளுறளைளஇ Pழளவகயஉh 439இ 4528 ணுரஉhறடை என்ற தபால் முகவரி மூலமாக 24.11.2019 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது தாயக விடுதலைக்காகப் போராடி வீரவரலாற்றைப்படைத்து வீரகாவியமானவர்கள் அனைவரும் வரலாற்றில் அழிக்கப்படமுடியாதவர்களும், மறந்துவிடமுடியாதவர்களும் என்பது திண்ணம். அந்தவகையில் இறுதிக்கட்ட போரின் போதும், தொடர்பிழந்தோர் என உறுதிப்படுத்த முடியாமல் மாவீரர் பட்டியலில் இணைக்கப்படாமல் இருந்தவர்களும் தற்போது அவர்களது உறவினர்கள், சகபோராளிகள், நண்பர்களால் இனங்காணப்பட்டவண்ணம் உள்ளார்கள். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களின் உறவுகள் அவர்களது விபரங்களை மேற்குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களுக்கமைவாகவும், மாவீரர் என உறுதிப்படுத்தியவர்களின் விபரம், தொடர்பாடல் முறை மற்றும் உறுதிப்படுத்தலுக்கான சான்றுகள் என்பவற்றுடன் எமக்கு அனுப்பி வைக்கவும்.

இவ்விபரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுக்கமைய மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்திய பின்பே வணக்கத்துக்கான ஒழுங்குகள் எம்மால் செய்யப்படும் என்பதைத் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்பார்ந்த மாவீரர் குடும்ப உறவுகளே!

ஈடு இணையற்ற பெரும் தியாகத்தைச் செய்தவர்களைத் தந்தவர்கள் நீங்கள். அவர்கள் மிகப்பெரும் இலட்சியப்பாதையை எமக்குக் காட்டிச்சென்றுள்ளார்கள். அவர்களுள் முகமறியாத மாவீரர்கள், வெளிப்படுத்தமுடியாத மாவீரர்கள் என பலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வணக்கம் செலுத்தவேண்டும் என்பதற்காகவே பொது மாவீரர் படத்துக்கான வணக்கத்தைச் செலுத்திவருகின்றோம். எனவே மாவீரர்களின் உயரிய தியாகங்களை நெஞ்சிருத்தி அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் என இவ்வாண்டும் அவர்களின் தேசிய நாளில் மீண்டும் உறுதியெடுத்துக்கொள்வோம்.

தொடர்புகளுக்கு : 076 528 71 12

076 426 27 80

031 381 40 58

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’