மிலேனியம் செலன்ச் கோர்பரேஷன் ஒப்பந்தத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு சந்தேகத்திற்குரியது-jvp

287 0

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள தருணத்தில் மிலேனியம்  செலன்ச் கோர்பரேஷன் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை விரைவாக  கைச்சாத்திட அரசாங்கம் முயற்சிப்பது பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த ஒப்பந்தம் முழுமையாக பாராளுமன்ற விவாதத்திற்கு  எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தினார்.

மிலேசியம் செலன்ச்  கோர்பரேஷன்  ஒப்பந்தத்தில்  பெருநகர அபிவிருத்தி  மற்றும், காணி   முகாமைத்துவம் உள்ளிட்ட  ஆகிய  இரு  பிரதான விடயங்கள்   உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையின்  காணி தொடர்பில் தொடர்பில்  முன்னெடுக்கும் தொடர்பில்  தீர்மானங்களை  குறித்த நிறுவனமே  மேற்கொள்ளும். காணி விவகார விடயங்களுக்குள் சந்தேகத்திற்கிடமான  ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அரச காணிகள் தனியாருக்கு விற்கும்  நிலைமை காணப்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தில்  திருட்டுத்தனமாக ஒப்பந்தங்கள் செய்துக் கொள்ளப்பட்டமையினால் பாரிய   விளைவுகள் ஏற்பட்டள்ளன. எட்சா  ஒப்பந்தம்  இன்று  நாட்டில் இறையாண்மையினை  பற்றி  கருத்துரைக்கும் ஜனாதிபதி  வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவே  கைச்சாத்திட்டார். எட்சா ஒப்பந்தத்தினை நடப்பு அரசாங்கம்  நீட்டித்துக்கொண்டுள்ளது.

அரசாங்கம்  அவசரமான முறையில்   மிலேனியம்  செலன்ச்  கோர்பரேஷன் நிறுவனத்துடன்    ஒப்பந்தம் செய்துக் கொள்ள முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.  இரு தரப்பினரும் இரகசியமான முறையில்   ஒப்பந்தினை கைச்சாத்திட முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.