தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூல்: பாங்காக்கில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்

279 0

மூன்று நாள் பயணமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற விழாவில் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் இன்று (நவம்பர் 3) நடைபெற உள்ளது. 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற் காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு பாங்காக் வந் தடைந்தார். பாங்காக் விமான நிலையத்தில் அவருக்கு தாய் லாந்து அரசு சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று உரையாற்றினார். அப்போது குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

 

தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந் தியர்கள், தாய்லாந்திலேயே நிரந்தரமாகக் குடியேறிய இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று நடை பெறவுள்ள இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தென் சீனக் கடலில் சீனாவின் அத்துமீறல் தொடர்பாக இதில் விவா திக்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாநாட்டில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசாவுடன் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து அவர் அளிக் கும் விருந்தில் அந்நாட்டு தலை வர்களுடன் மோடி கலந்து கொள்கிறார். மேலும் 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்பார். இந்த நிகழ்வின்போது இந்தியா, தாய்லாந்து மண்டல அளவிலான விரிவான பொருளாதார ஒத் துழைப்பு தொடர்பாக உறுப்பு நாடு களின் தலைவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான பிரச் சினைகளும் பேசப்பட உள்ளன.

மேலும் தாய்லாந்து – இந்தியா இடையேயான இருதரப்பு உறவு குறித்து இந்த பயணத்தில் பிரதமர் மோடி கலந்தாலோசிக்க உள்ளார். மாநாட்டு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் பாங்காக்கில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை புறப்படுவார் எனத் தெரிகிறது.