ஜப்பானில் எரிமலை வெடிப்பு!

281 0

ஜப்பானில் சாட்சுமா அயோஜிமா தீவுப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் அதிகாரிகள் தரப்பில், “ ஜப்பானின் தென் பகுதியில் உள்ள காகோஷிமா மாகாணத்தில் உள்ள எரிமலை ஒன்று சனிக்கிழமையன்று வெடிக்கத் தொடங்கியது. மாலை சுமார் 5.35 மணியளவில் எரிமலை வெடிக்கத் தொடங்கியதன் காரணமாக அப்பகுதியில் கரும்புகை பரவியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஜப்பானில் கடந்த ஆண்டு 250 ஆண்டுகளுக்குப் பின்னர் ’மவுண்ட் லோ’ எரிமலை வெடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் செயல்படும் நிலையில் மொத்தம் 103 எரிமலைகள் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜப்பானில் உள்ள மவுண்ட் ஆன் டேக் முன்னெச்சரிக்கை அறிகுறிகளுடன் வெடித்தது. இதில் 57 பேர் பலியாகினர். கடந்த 90 ஆண்டுகளில் ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றம் இந்த எரிமலை வெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.