கேரளாவில் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்ப டும் மாவோயிஸ்ட் கார்த்திக்கின் உடலை அடையாளம் காண முடிய வில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மஞ்சக்கட்டி மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கேரள அதிரடிப் படையான, `தண்டர்போல்ட்’ போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு போலீ ஸார் வந்ததையறிந்த மாவோயிஸ் டுகள், அவர்களை நோக்கி துப்பாக் கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகளான மணி வாசகம், கண்ணன் என்ற கார்த்திக், சுரேஷ் (எ) அரவிந்தன், மதி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் போலீஸார் சிலரும் காயம் அடைந்தனர்.
உயிரிழந்த 4 பேரில் கார்த்திக் என்பவர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கல்லூர் கிராமத் தைச் சேர்ந்த விவசாயியான முத்து, மீனா ஆகியோரின் இளைய மகன் என்பது தெரியவந்துள்ளது. அச்ச கம் ஒன்றில் வேலை செய்துவந்த முத்து இறந்துவிட்டார்.
இந்நிலையில், தனது மகன் கார்த்திக் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறப்படுவது குறித்து அவரது தாய் மீனா, நேற்று கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கும் முன்பு திருப்பூரில் வேலை செய்து வந்த கார்த்திக்கை மாவோயிஸ்ட் என்று கூறி அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்ற போலீஸார் கைது செய்தனர். பின்னர், என் மகனைப் பற்றிய எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், கடந்த அக்.28-ம் தேதி கேரளாவில் போலீஸார், மாவோயிஸ்ட் எனக் கூறி கார்த் திக்கை சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல் வந்தது.
இதையடுத்து, மறுநாள் என் மூத்த மகன் முருகேசனுடன் அங்கு சென்றோம். கார்த்திக்கின் உடல், பிரேத பரிசோதனைக்காக மருத்து வமனைக்கு கொண்டு செல்லப் பட்டுவிட்டதாகக் கூறிய போலீஸார், என் மகனின் முகத்தை காட்ட மறுத்துவிட்டனர் என்றார்.
இதுகுறித்து முருகேசன் கூறிய தாவது: கார்த்திக்கின் உடலைப் பார்க்க போலீஸார் எங்களை அனுமதிக்கவில்லை.
இதனால், இறந்தது கார்த்திக் தானா என எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அக்.31-ம் தேதி நீதிமன்றத்தை நாடினோம். நீதி மன்ற உத்தரவை அடுத்து, அன்று இரவு உடலைப் பார்க்க அனுமதித் தார்கள்.
எனினும், கார்த்திக்கின் உடல் தானா என்பதை அடையாளம் காண முடியவில்லை. எனவே, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட கார்த்திக் போட்டோவைக் கொடுத்தால் தெளி வாக அடையாளம் காட்டுவதாக தெரிவித்தேன். ஆனால், இதுவரை அந்தப் படத்தை எங்களுக்கு போலீ ஸார் அனுப்பிவைக்கவில்லை.
நீதிமன்றத்திடம் கேரள மாநில அரசு 2 நாட்கள் அவகாசம் (நவ.4 வரை) கோரி இருந்த நிலையில், அதன் பிறகு அம்மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப சடலத்தை பெற்றுக் கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

