480 மில்லியன் டொலருக்காக தாய் நாட்டை காட்டிக் கொடுக்க முடியாது – உதய கம்மன்பில

356 0

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அதிகாரத்தை இழக்கவுள்ள அரசாங்கம் இரசகியமாக் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த ஒப்பந்தம் செல்லுபடியற்றதாகவே கருதப்படும் என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் இடங்களை அமெரிக்காவுக்கு தாரை வார்த்து கொடுக்கும் மிலேனியம் சவால் உடன்படிக்கைக்கு கடந்த செவ்வாய் கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றவுடனேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திடவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

எனினும் பிரதமர் கூறியதைப் போன்று தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திட முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மிடம் தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவிப்பை மீறி பிரதமரும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதற்கு தயாராக இருக்கின்றனர்.

480 மில்லியன் டொலர் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப் பெறும். இந்நிலையில் இதில் கையெழுத்திடுவதில் என்ன தவறு என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்புகிறார். 480 மில்லியன் டொலர் கிடைக்கிறது என்பதற்காக எம்மால் தாய் நாட்டை காட்டிக் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.