வெளிநாட்டில் இருந்தவாறு தொலைபேசி மூலம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரான் எதிர்வரும் 15 திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அரச பகுப்பாய்வாளரின் அறிக்கையை பெற்றுக்கொள்ள ஒரு பிரத்தியேக பொலிஸ் அதிகாரியை நியமிக்குமாறு அரச பாகுப்பாய்வாளர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதற்கமைய பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் குறித்த அறிக்கையை கையளிக்குமாறு நீதவான் அரச பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டார்.
போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமக்கு நெருக்கமான ஒருவரை விடுவிக்குமாறு வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தொலைப்பேசியில் அழைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த கஞ்சிபான இம்ரான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

