வட கொரியா மேலும் இரு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் கொரிய கூட்டுப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் பியோங்கன் மாகாணத்திலிருந்து நேற்று(வியாழக்கிழமை) குறித்த இரண்டு ஏவுகணைகளும் ஏவப்பட்டுள்ளன.
கிழக்கு நோக்கி ஏவப்பட்ட குறித்த ஏவுகணைகள், அதிகப்பட்சமாக 90 கி.மீ. உயரம் சென்று, 370 கி.மீ. தொலைவில் கடலுக்குள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவுடனான அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை வட கொரியா தொடர்ந்தும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிக்கு பின்னர் வட கொரியா தற்போது முதல் முறையாக இத்தகைய சோதனையில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

