ஹொங் கொங்கில் தொடர் போராட்டம்!

449 0

ஹொங் கொங்கில், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹொங் கொங்கில் சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிராக போராடியவர்களை தாக்கிய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல வாரங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மத்திய கவ்லூன் மாவட்டத்தில் பலர் கருப்பு நிற உடை மற்றும் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அங்கு வந்த பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தை கலைத்தனர்.

போராட்டக்காரர்கள் முகமூடி அணிந்துகொண்டு போராட தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.