ஏமனின் கடற்கரை நகரமான ஏடனிலிருந்து படைகளை மீளப்பெறுவதாக ஐக்கிய அமீரகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அமீரக இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஏமனின் கடற்கரை நகரமான ஏடனிலிருந்து ஐக்கிய அமீரகம் படைகளைத் திரும்பப் பெறுகிறது.எங்கள் படைகள் தாயகம் திரும்புகின்றன. இப்பகுதிக்கான பொறுப்பு சவுதி மற்றும் ஏமன் படைகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மேலும் ஏமனின் தென் பகுதிகளில் உள்ள பிற பகுதிகளில் தீவிரவாதத்தை எதிர்த்து ஐக்கிய அமீரகம் சண்டையிடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

