கிளிநொச்சியில் பதுங்குகுழி போன்ற கட்டமைப்பொன்று கண்டுபிடிப்பு

334 0

கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி போன்றதான கட்டமைப்பொன்று புதிதாக  கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை, குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இவ்வாறு கொங்கிரீட்டினாலான கட்டமைப்பு ஒன்றை கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்டந்து துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த கதவலுக்கமைய அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், கட்டமைப்பு தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.