மஹிந்த ராஜபக்ஷவையே பிரதமர் பதவிக்காக நிறுத்துவோம் – சரத் அமுனுகம

316 0

எமது கூட்டணியை பொறுத்த வரையில் நாம் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவையே பிரதமர் பதவிக்காக நிறுத்துவோம் என கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மஹிந்த ராஜபக்ஷவையே பிரதமர் பதவிக்கே நிலை நிறுத்துவோம் என ஏகமனதாக தீமானித்துள்ளோம்.

ஜனாதிபதியாக பிரதமராக நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பிரதமராக உருவாக்குவோம்.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியை எடுத்து கொண்டால் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ஐ.தேகாவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யார் தமது பிரதமர் என்பதை பெயரிடாது தவிர்த்து வருகிறது.

ஐ.தே.க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெரும்பட்சத்தில் யார் ஐ.தே.காவின் பிரதமர் என பொது மக்கள் மிகவும் ஆவலாக உள்ளனர் ஆனால் இக் கேள்வியை சஜித் பிரேமதாச தவிர்த்தே வருகிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.