நிதா­ன­மாகச் சிந்­தித்து முடிவை அறி­விப்போம் – சுமந்­திரன்

347 0

நாமே தமிழ் மக்­க ளின் உண்­மை­யான பிர­தி­நி­திகள்.  எனவே  வேட்­பா­ளரை இனங்கண்டு நெறிப்­ப­டுத்­த­ வேண்­டி­யது எமது கடமை என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

தென்­ம­ராட்­சியின் தொகு­திக்­கிளை மற் றும் வட்­டாரக் கிளை­யி­ன­ரு­ட­னான சந்­திப்பு மாகா­ண­சபை முன்னாள் உறுப்­பி­னரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான கேசவன் சயந்தன் தலை­மையில் நேற்று முன்­தினம் நடை­பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், ஜனா­தி­பதித் தேர்­தலில் நல்­லவர் யார் கெட்­டவர் யார் என்று நாம் ஆராய்ந்­து­கொண்­டி­ருக்க முடி­யாது. இரு­வரும் கெட்­ட­வர்­கள்தான்.  சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் தேவை­யில்லை என்று  கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஏற்­க­னவே கூறி­விட்டார்.

சஜித் பிரே­ம­தா­ச­வுடன் நாம் எமது நிலைப்­பா­டுகள் தொடர்பில் பேசலாம். எமது இன த்­தையே அழித்­த­வர்கள் ராஜ­ப­க் ஷக்கள் தான். ஆகவே நாம் நிதா­ன­மாக செயற்­ப­ட­வேண் டும். சில­வே­ளை­களில் நாம் வெற்­றி­பெ­ற­வேண்டும் என்று நினைக்­கின்ற வேட் ­பாளர் எமது அறி­விப்பால் தோல்­வியைத் தழு­வலாம்.  அவ்­வா­றுதான் தென்­னி­லங்­கையின் நிலைமை உள்­ளது. இந்த இடத்தில் நாம் நிதா­னத்­து­டனும் பொறு­மை­யு­டனும் சிந்­தித்து முடி­வெ­டுக்­க­வேண்டும்.

தென்­னி­லங்­கையின் வெற்றி வேட்­பா­ள­ராகக் கோத்தா உள்ளார். எமது வாக்­கு கள் பொன்­னா­னவை. தமி­ழர்கள் என்­றில்­லாமல் சிறு­பான்­மை­யின தமிழ்பேசும் மக்கள் அனை­வரும் ஒன்­றாக ஒரு­வரைத் தெரி­வு­செய்­தால்தான் எமது குறிக்­கோளை நாம் அடை­யலாம். பல்­க­லைக்­க­ழக மாண­ வர்கள் ஆறு கட்­சி­களை ஒன்­றி­ணைத்தனர். அதில் ஒரு கட்சி தேர்­தலை புறக்­க­ணிக்கும் படி கூறி­விட்டு வில­கி­விட்­டது. மற்­றைய கட்சி ஊட­கங்­களில் ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது. நாம் எந்த வேட்­பா­ள­ ரையும் சுட்­டிக்­காட்ட முடி­யாது என்று அக்­கட்சி கூறி­விட்­டது. அந்தக் கட்சி ஒரு பதி­யப்­ப­டாத கட்சி. அவர்­களின் கருத்தைப் பார்த்தால் 35 வேட்­பா­ள­ருக்கும் தமிழ் மக்­களின் வாக்­குகள் சிந்­தப்­ப­டட்டும் என்­பதே தெரி­கின்­றது.

தமிழ் மக்கள் தமது பிர­தி­நி­தி­க­ளாக எம்­மை த்தான் தெரிவு செய்துள்ளார்கள். வடக்கு, கிழக்கில் 18 பாரா­ளு­மன்ற உறுப்பினர்களில் எமது கட்­சியைச் சார்ந்­தவர்கள் 16 பேர்.மக்கள் எம்மைத் தெரிவு செய்­துள்­ளார்கள். அவர்­க­ளுக்கு பொறுப்­புடன் கட­மை­யாற்ற­ வேண்­டி­யது எமது கடமை. நாம் எமது முடிவை நிதா­ன­மாக சிந்­தித்தே அறி­விக்­க­வேண்டும்.மைத்­தி­ரியை நாம் கொண்­டு­வந்து எதுவும் நடை­பெ­ற­வில்லை என்­கி­றார்கள். அது முழுக்க முழுக்கப் பொய். எதுவும் நடை­பெ­ற­வில்லை என்று கூற­மு­டி­யாது. ஏரா­ள­மான அபி­வி­ருத்­திகள் நடை­பெற்­றன. பல ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. பல அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­பட்டனர். ஏன் ­பா­ரா­ளு­மன்றம் அரசமைப்புச் சபை யாக மாற்றப்பட்டு புதிய அரசமைப்பு நகல் கடந்த ஜனவரி பாராளுமன்றில் சமர்ப்பிக் கப்பட்டது. இவ்வாறு பல செயற்பாடு கள் நடைபெற்றன.  எனவே குறித்த விட யங்களை தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை நாம் சிந்தித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றார்.