தங்கத்துடன் 14 இலங்கையர்கள் கைது!

281 0

4.7 கிலாகிராம் தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவந்த குற்றச்சாட்டின் கீழ் 14 பேரை கட்டுநயாக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 30 தொடக்கம் 50 வயதுடைய கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவையூடாக  நேற்றிரவு 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 4.7 கிலேகிராம் தங்க நகைகளின் பெறுமதியானது 31.97 மில்லியன் ரூபா பெறுமதியுடையது எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.