இரண்டாவது நாளாகவும் இன்று தொடரும் தபால்மூல வாக்களிப்பு!

278 0

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் நாள் தாபால் மூல வாக்களிப்பு இன்று சுமார் 1.700 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்றது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் நேற்றைய முதல் நாளில் எந்தவொரு பாரிய வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லை என தேர்தல்கள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்முறை தபால் மூலம் வாக்களிக்க 6 இலட்சத்து 59 ஆயிரத்து 514 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், பொலிஸார் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் தபால் மூலம வாக்களிக்க என எதிர்வரும் நவம்பர் 4 ஆம் 5 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறித்த இரு தினங்களில் தமது தபால் மூல வாக்குப் பதிவை செய்ய முடியாமல் போவோருக்கு என வக்குப் பதிவுக்காக விஷேடமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியும் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமானதுடன் இன்று 2 ஆம் இரண்டாம் நாள் தாபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.