ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு இன்று பூட்டு

313 0
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளையும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியன வலயத்தில் உள்ள பாடசாலைகளையும் இன்று (31) மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.

இப்பிதேசத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஹேமால் குணசேகர மேலும் தெரிவித்தார்.