அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 6ஆம் திகதி போராட்டம்

311 0

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாகக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

எவ்விதமான அடக்குமுறை வந்தாலும் தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், இது தேர்தல் விதிமுறைகளை மீறாத வகையிலேயே இடம்பெறும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் 15 வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்று வருபவர்களை பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.