அவசியம் இருந்தால் நாட்டை அபிவிருத்தி செய்வது கடினமில்லை-அனுர

314 0
பணத்தை தேடிக் கொள்வது கடினமாக காரியம் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் நேற்று (30) பிற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், யுத்தக் காலப்பகுதியில் தரை வழித் தாக்குதலை பலப்படுத்த வான்வழித் தாக்குதல்கள் இல்லாமல் மேற்கொள்வது சிரமம் என கூறிய போது, அப்போது பணம் இல்லை என்று கூறாமல் அவற்றை கொண்டு வந்து கொடுத்தார்கள்.

அதன்படி, உலகில் உள்ள சிறந்த 4 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அலிமங்கட நடவடிக்கையின் போது இராணுவத்தின் ஆயுதங்கள் போதுமானதாக இல்லை என தெரிவித்த போது, பாகிஸ்தானில் இருந்து மல்டி பெரல் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டன.

கடல் பகுதியில் விடுதலை புலிகள் வலுவடைந்து வந்த போது அதனை அழிப்பதற்கு கடற்படை டோரா படகினை கோரியிருந்தனர். அதுவும் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.

எனவே, அவசியம் இருந்தால் பணத்தை தேடிக் கொள்ள முடியும். தனக்கு ஒரு முறை அதிகாரத்தை தருமாறு அவர் தெரிவித்தார்.