வைத்திய சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில்!

339 0

துறைசார் பிச்சினைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பணிப்புறக்கணிப் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வைத்திய உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாத துறைசார் பிரச்சினைகளை முன்வைத்தே நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக வைத்திய உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இப் பணிப்புறக்கணிப்பானது இன்று காலை 8 மணிமுதல் 24 மணி நேரத்திற்கு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய உதவியாளர் சங்கத்துடன் தொடர்புடைய பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.