அரசியல் தலைவர்களின் மின்கட்டண பாக்கியை தடுக்க, ‘பிரி பெய்டு மீட்டர்’

385 0

அரசு அலுவலகங்கள், ஊழியர்களின் குடியிருப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளில் ‘பிரி பெய்டு மீட்டர்‘ (முன்கூட்டியே மின்சார கட்டணம் செலுத்தும் முறை) கருவியை பொருத்த திட்டமிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தர வேண்டிய மின்சார பாக்கியை வசூலிக்க அந்த மாநில அரசு புதிய யுக்தியை கண்டுபிடித்துள்ளது. அரசு அலுவலகங்கள், ஊழியர்களின் குடியிருப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளில் ‘பிரி பெய்டு மீட்டர்‘ (முன்கூட்டியே மின்சார கட்டணம் செலுத்தும் முறை) கருவியை பொருத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில மின்சார துறை மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, “மாநிலத்தில் உள்ள அரசு தலைவர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வீடுகளில், அரசு அலுவலகங்களில் இருந்து மட்டும் மின்சார கட்டண பாக்கி ரூ.13 ஆயிரம் கோடி வரவேண்டி இருக்கிறது. இதை தடுக்கும் நோக்கத்தில் தனியார் தயாரிப்பு நிறுவனத்திடம் 1 லட்சம் ‘பிரி பெய்டு மீட்டர்‘ கருவிகள் நேரடி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி கூடிய விரைவில் பொதுமக்கள் வீட்டிலும் பொருத்தப்படும்.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 75 மாவட்டங்களில் 68 மாவட்டத்தில் மின்சார திருட்டை தடுக்க சிறப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன“ என்றார்.