கொழும்பு – கொச்சிக்கடை, ஜம்பட்டாவீதி துப்பாக்கி பிரயோகத்துடன் தொர்புபட்ட சந்தேக நபர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நேற்று காலை 10.25 கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஹர்ஷ உதயங்க என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி ஜம்பட்டாவீதி பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுள்ளார் இதனுடன் தொடர்புபட்ட சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து துப்பாக்கி பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வண்டி ஒன்றும், கையடக்க தொலைபேசிகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

