தற்போதைய அரசாங்கம், மக்களிடையே இனவெறியை தூண்டி சமூகங்களிடையே மோதல்களை உருவாக்கியது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
வெலிமடாவில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றைப் பார்க்கும்போது, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, கட்சியின் முந்தைய தலைவர்களில் எவரையும் கூட நெருங்கவில்லை என்றும் அந்தளவிற்கு சஜித் பலவீனமான நபர் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் இனவாதம் மற்றும் பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெற்றபோது தடுக்க சஜித் பிரேமதாச ஒருபோதும் செயல்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டிய அவர், அதற்கு பதிலாக, பிரேமதாச மோதலை அதிகரிக்கச் செய்தார் என்றும் குற்றம் சாட்டினார்.
இதேவேளை நாட்டில் மோதல்கள் ஏற்படும்போதெல்லாம், அதற்கு தீர்வுகாண நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராடியது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க என்றும் அவர் குறிப்பிட்டார்.

