அரசியல்வாதிகள் நாட்டை அழித்துள்ளனர் – மகேஷ் சேனாநாயக்க

320 0

அரசியலில் ஈடுபட்டிருந்த குடும்பங்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டை அழித்துள்ளனர் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ‘இதுவரை காலமும் அரசியலில் ஈடுபட்டிருந்த குடும்பங்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டை அழித்துள்ளனர்.

அவர்கள் எவரையும் இணைத்துக்கொள்ளாது, புதிதாக ஆரம்பித்தமை சிறந்ததாகும். வாக்களித்தமையே எனக்கிருக்கும் அரசியல் அனுபவமாகும்.

இந்த முறையிலேயே இம்முறை செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் என நான் தீர்மானித்தேன். எனது கட்சி உறுப்பினர்களின் திறமைகளை தேர்தல் செயற்பாடுகளில் நான் பயன்படுத்துவேன்.

தொழில் வல்லுனர்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளனர்.

இந்த நாட்டிற்கு அவர்கள் பாரிய பலமாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் இந்த நாட்டை நிர்வகிக்கக்கூடாது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச ஊழியர்களே நாட்டை நிர்வகிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.