பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் வெல்லம்பிட்டியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான குடு திலீப் என அழைக்கப்படும் திலீப் தரங்க ஹெட்டியாரச்சி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியொன்றுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

