ரிசாட், ஹக்கீம், சம்பந்தன் ஆகியோர் எமக்கு வேண்டாம்- நாமல்

197 0

அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ரிசாட், ஹக்கீம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றின் ஒத்துழைப்பு அவசியமில்லையென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஏறாவுர் பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை வரை அமைக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலையை கிழக்கு மாகாணம் வரையும், கிழக்கு மாகாணம் வரை வந்ததை வட மாகாணம்  வரை எடுத்துச் செல்லவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் சம்பந்தன் போன்று பொய் கூற மாட்டோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.