தனிமையில் வசித்த மூதாட்டி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழப்பு

309 0

கலேவெல பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மூதாட்டியின் மகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய கலேவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

65 வயதான மூதாட்டி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.