சீரற்ற வானிலையால் மத்தளைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்!

325 0

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் மத்தளை ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 127 பயணிகளுடன் வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல் – 192 என்ற விமானமே இவ்வாறு மத்தளை விமான நிலையத்தில் 9.35 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக  விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டதன் பின்னர் 10.30 மணியளவில் மீண்டும் கட்டுநாயக்க, விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டதாக மத்தளை விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.