வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க இரு விசேட தினங்கள்

203 0

ஜனாதிபதித் தேர்தலுக்கான  வாக்காளர் அட்டைகளை  விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக நவம்பர் 3 ஆம் 10 ஆம் ஆகிய இரு தினங்களும் விசேட விநியோக தினங்களாக அமுல்படுத்தப்படவுள்ளதாக, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுக்களை  விநியோகிக்கும் நடவடிக்கைகள், தற்போது  இடம்பெற்று வருவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  ஒக்டோபர் 31 மற்றும் நவம்பர்  முதலாம் திகதிகளில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப் பதிவுகள்  இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அளிக்கப்பட்ட வாக்குகள் தெரிவத்தாட்சி அலுவலரிடம் மீள ஒப்படைப்பதற்குத் தேவையான  நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள்,  எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தபால் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  அனைத்து வாக்காளர்களுக்கும், உரிய நேரத்தில் வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிக்கப்படுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.