சஜித்தை வெற்­றி­பெறச் செய்து போராட்­டத்தை தொடர்வோம் – ராஜித

224 0

ஜன­நா­ய­கத்தை முன்­நி­றுத்தி 2015 ஆம் ஆண்டில் நாங்கள் ஆரம்­பித்த போராட்டம் இன்­னமும் முடி­வ­டை­ய­வில்லை. அப்­போது எம்மால் தேசிய அர­சாங்கம் ஒன்­றையே அமைத்­துக்­கொள்ள முடி­யு­மாக இருந்­தது. எனவே அத­னூ­டாக எதிர்­பார்த்த அனைத்­தையும் நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­ய­வில்லை. ஆகவே எதிர்­வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திக­தி­யி­லி­ருந்து சாதா­ரண மக்­களின் துன்­பங்­களை நன்­க­றிந்த சஜித் பிரே­ம­தா­ஸவை வெற்­றி­பெ­றச்­செய்து, எமது அந்தப் போராட்­டத்தைத் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­போ­கின்றோம் என்று சுகா­தார மற்றும் சுதேச வைத்­திய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஜன­நா­ய­கத்­திற்­கான ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஒன்­றியம் ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு முன்­வந்­தி­ருக்கும் நிலையில், அதனை அறி­விக்கும் நிகழ்வு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்­பி­லுள்ள இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

எமது நாட்டில் முன்­னெப்­போதும் இல்­லாத வகையில் 2015 இற்கு முன்­ன­ரான கடந்த அர­சாங்­கத்தின் காலத்­தி­லேயே ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது கடு­மை­யான வன்­மு­றைகள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. அதற்கு முன்­னரும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும், ஊடக நிறு­வ­னங்­களும் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் பிர­பல பத்­தி­ரிகை ஒன்றின் ஆசி­ரியர் மீது எவரும் கைவைத்­த­தில்லை. எனினும் கடந்த ஆட்­சியில் சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்க மற்றும் தர்­ம­ரத்னம் சிவராம் போன்ற பலர் கொல்­லப்­பட்­டனர். பிரகீத் எக்­னெ­லி­கொட காணா­ம­லாக்­கப்­பட்டார். கீத் நொயார், உபாலி தென்­னகோன், போத்­தல ஜயந்த போன்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் தாக்­கப்­பட்­டார்கள். தெற்கில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டது போன்று, வடக்­கிலும் 39 ஊட­க­வி­ய­ல­ளார்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றனர். அதே­போன்று உதயன் பத்­தி­ரிகை காரி­யா­ல­யத்­திற்கு 3 முறை தீவைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

 

மஹிந்த ராஜ­ப­க்ஷ­வையும், அவ­ரு­டைய குடும்­பத்­தி­ன­ரையும் தவிர்த்து வேறு யார் குறித்தும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழு­தலாம் என்ற நிலையே அப்­போது காணப்­பட்­டது. கடந்த ஆட்­சியில் காணப்­பட்ட இத்­த­கைய மோச­மான செயற்­பா­டு­களே 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் நாம் வெற்­றி­ய­டை­வ­தற்கு முக்­கிய கார­ண­மாக அமைந்­தது. லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் படு­கொ­லை­யுடன் நான் அந்த அர­சாங்­கத்­தை­விட்டு வெளி­யேறத் தீர்­மா­னித்­த­துடன், அதனை அறி­விக்கும் வித­மாக ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்­றையும் நடத்­து­வ­தற்­கான ஆயத்­தங்­களை மேற்­கொண்­டி­ருந்தேன். எனினும் தொலை­பே­சியின் ஊடாக என்னைத் தொடர்­பு­கொண்ட மஹிந்த ராஜ­பக்ஷ, உட­ன­டி­யாக இவ்­வா­றா­ன­தொரு தீர்­மா­னத்தை மேற்­கொள்ள வேண்டாம் என்றும் யார் கொலை­யா­ளிகள் என்­பதைக் கண்­ட­றி­வ­தற்கு உத­வு­மாறும் கேட்­டுக்­கொண்டார். இந்­நி­லை­யி­லேயே 2015 ஆம் ஆண்டு நாம­னை­வரும் ஒன்­றி­ணைந்து வெளி­யேறி, ஜன­நா­ய­கத்தை முன்­நி­றுத்­திய எமது போராட்­டத்தை ஆரம்­பித்தோம்.

அவ்­வாறு வெளி­யே­றிய போது பலரும் என்னைத் தொடர்­பு­கொண்டு, ‘மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோற்­க­டிக்க முடியும் என்று கரு­து­கின்­றீர்­களா? ஏன் அவ­ரு­டைய தரப்­பி­லி­ருந்து வெளி­யே­றி­னீர்கள்?’ என்றே பலரும் வின­வி­னார்கள். எனினும் நாம் ஒன்­றி­ணைந்து போரா­டினோம். அப்­போது தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்­கான மேற்­கொண்ட செல­வு­களை விட அவர்­களின் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து எம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்கே அதி­க­ளவில் திட்­ட­மிட்டு செயற்­பட்டோம். இந்­நி­லையில் 2015 ஆம் ஆண்டில் நாங்கள் அமைத்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக அனைத்­தையும் விட முதன்­மை­யான ஒவ்­வொரு பிர­ஜை­யி­னதும் உயிர்­வாழும் உரி­மையை உறு­திப்­ப­டுத்­தினோம். நாம் பெற்­றுக்­கொ­டுத்த ஊடக சுதந்­தி­ரத்தை இன்று எமக்கு சேறு பூசு­வ­தற்கே பயன்­ப­டுத்­து­கின்­றார்கள்.

இன்­ற­ளவில் சில ஊட­கங்கள் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­கின்­றன. அதன்­போது கொல்­லப்­பட்ட, காணா­ம­லாக்­கப்­பட்ட, தாக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் அவர்­களின் நினை­விற்கு வர­வில்­லையா என்று கேட்க விரும்­பு­கிறேன். எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜன­நா­ய­கத்தை முன்நிறுத்தி நாங்கள் ஆரம்பித்த போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. எமது நோக்கங்களில் இன்னும் சிலவற்றை அடைந்துகொள்ள முடியவில்லை. அப்போது எம்மால் தேசிய அரசாங்கம் ஒன்றையே அமைத்துக்கொள்ள முடியுமாக இருந்தது. எனவே அதனூடாக எதிர்பார்த்த அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. ஆகவே எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து சாதாரண மக்களின் துன்பங்களை நன்கறிந்த சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச்செய்து, எமது அந்தப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்போகின்றோம்.