சுவிஸ்வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

454 0

maveerar

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களாகிய தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
– தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் –

மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் குடும்ப உறவுகளே!

தமிழர்களின் தொன்மை மிக்க பண்பாடுகளில் ஒன்று நடுகல் வழிபாட்டு முறை. அந்தப் பாரம்பரிய பண்பாட்டின் வடிவமாகவும் எங்கள் தேசப்புதல்வர்களின் உறைவிடமாகவும் விளங்கிய மாவீரர் துயிலும் இல்லங்கள் சிறிலங்கா அரசினால் இன்று திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில், வையகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் இலட்சிய உறுதியுடனும், தேசியப்பற்றுடனும் எழுச்சி கொள்ளும் நவம்பர் 27 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களினால் அந்தந்த நாடுகளில்; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தின் குழசரஅ மண்டபத்தில் 27.11.2016 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாகி வழமைபோன்று நடைபெறவுள்ளது.

அன்றையதினம் காலை 08:30 மணிக்கு இவர்டோனில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு சுமந்த நடுகல்லிற்கு வணக்கம் செலுத்தி உறுதியெடுத்தலைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு மாவீரர் நாள் வணக்க மண்டபத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெறும். இந்நிகழ்வுகளுக்கு வருகை தந்து எமது தேசப்புதல்வர்களின் உணர்வுகளோடு சங்கமிக்கும் வண்ணம் மாவீரர் குடும்ப உறவுகள் அனைவரையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

சுவிஸ் நாட்டில் இதுவரை காலமும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் விபரங்களைப் பதிவு செய்யாதவர்களும் ஏற்கனவே பதிவு செய்திருந்த போதும் எமது தொடர்புகள் கிடைக்கப் பெறாதவர்களும் எம்மோடு உடன் தொடர்புகொள்ளும் வண்ணம் பணிவன்போடு கேட்டுக் கொள்வதோடு தங்களின் புரிந்துணர்வு மிக்க ஒத்துழைப்புக்கள் எமது செயற்பாடுகளுக்கு மேலும் பலம் சேர்க்கின்றன என்பதை மகிழ்வோடு இத்தருணத்தில் அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு: வுயஅடையச சுநஅநஅடிசயnஉந குழரனெயவழைn – ளுறளைளஇ Pழளவகயஉh 439இ 4528 ணுரஉhறடை.
076 426 27 80 076 528 71 12 078 686 76 16

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்