சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஐந்து பேர் கைது

313 0

தமிழகத்தில் இருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்தே குறித்த சந்தேகநபர்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை  கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பேசாலை, யாழ்ப்பாணம், தலைமன்னார், மன்னார் பகுதிகளை சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடற்படையினர், குறித்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றை சோதனையிட்டபோதே இவர்கள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.