பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து பத்தாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு இன்று கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
55 நாடுகளின் 12 சர்வதேச அமைப்புகளின் மற்றும் 03 பாதுகாப்பு துறை பொருட்கள் தொடர்புடைய நிறுவனங்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடல் பாதுகாப்பு நிபுணர்களின் பங்கேற்புடன் ‘ஒரு புதிய சிந்தனையுடன் தசாப்தத்தின் மீளாய்வு’ என்ற கருப்பொருளின் கீழ் இன்றும் நாளையும் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு பங்குதாரரும் தனிப்பட்ட தேசத்தின் நலனுக்கேற்ப பல்வேறு வகையான கடற்பரப்பின் பொதுவான நன்மைக்கு பங்களித்தனர்.
இந்த பங்களிப்புகள் அனைவருக்கும் கடல்களைப் பாதுகாப்பாக மாற்றுவதற்காக ஒருவருக்கொருவர் பின்னோக்கிப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய மிலேனியத்தின் மூன்றாம் தசாப்தத்திற்கு அவர்கள் தயாராகும்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் பரிந்துரைகளுடன் வழக்கு ஆய்வுகள் இந்த மாநாடு முன்வைக்கும்.
மேலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நல்வாழ்வுக்கான அச்சுறுத்தல்களைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு பங்குதாரரும் எவ்வாறு எதிர்கொண்டார்கள் மற்றும் செயற்படுத்தினர் என்பதற்கான பிரதிபலிப்பாகவும் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

