விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழு அதிகாரிகள் ஆய்வு

195 0

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தரம் குறித்து மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய அரசு அறிவித்துள்ள முன்னேறத் துடிக்கும் 117 மாவட்டங்களில் தமிழகத்தில் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இம்மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மற்றும் சாத்தூர் பகுதிகளிலும் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் பகுதிகளிலும் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இக்குழுவில் மருத்துவர்கள், பொறியாளர்கள், நிதித் துறை அலுவலர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். டில்லியில் இருந்து 8 அலுவலர்களும் சென்னையைச் சேர்ந்த 8 அலுவலர்களும் 4 குழுக்களாகப் பிரிந்து இந்த ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆய்வின் போது அரசு மருத்துவமனைகளில் உள்ள சிகிச்சை முறைகள், படுக்கை வசதிகள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள், அரசின் சலுகைகள் குறித்து நோயாளிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை கட்டுமான வசதிகள், அரசு அளிக்கும் நிதி திட்டங்கள் வாரியாக பயன்படுத்தப் படுகிறதா என்பது குறித்தும் விரிவான ஆய்வுகளை இக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் இன்றும் இக் குழுவினர் ஆய்வு பணியை தொடர உள்ளதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.