யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!

228 0

யாழில் பொலிஸாரினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இராசாவின் தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் மறைந்திருக்கின்றார் என யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.

சந்தேக நபரை கைது செய்யும்போது அவரது உடமையில் இருந்து கைக்குண்டு ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் இடம்பெற்ற பல கொள்ளை, வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சிறையிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை தமது உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பொலிஸ் நிலைய சிறைக்கூட கதவின் பூட்டினை சரியாக பொலிஸார் பூட்டாததால், அதனை திறந்து குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவானார்.

இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தப்பி சென்ற நபரை கடந்த இரு வார காலத்திற்கு மேலாக பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று இராசாவின் தோட்டம் பகுதியில் மறைந்திருந்தபோது கைது செய்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.