த.தே.கூ.வுடன் விரைவில் பேச்சுவார்த்தை – மஹிந்த

299 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் இதுவரை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வரவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, விரைவில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷவுடனான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் உள்ள ஷங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்தவுடன் புதிய பிரதமரையும், புதிய அமைச்சரவையும் நியமிக்க வேண்டும். எமது புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்தவுடன் முதல் வேலையாக இவற்றை மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.