பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை ஏற்படுத்துவதாக கூறி ஏமாற்றிய அரசாங்கம் குறைந்தபட்சம் தீபாவளி முற்பணத்தையாவது வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் ஆதரவு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த பின்னர் அக்கட்சியின் பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொழிலாளருக்கு சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் ஏமாற்றி இழுத்தடிப்பு செய்தது. 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென கூறி அதையும் செய்யவில்லை.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வானளாவ அதிகரித்துள்ள நிலையில் தீபாவளி முற்பணத்தையாவது அரசு வழங்க வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை கவனத்திற் கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

