சர்வதேச வலைப்பந்தாட்டத்திலிருந்து விடைபெறுகிறார் இலங்கை அணித்தலைவி சத்துரங்கி ஜயசூரிய!

380 0

இலங்கை வலைப்பந்தாட்ட அணித்தலைவியும் சிரேஷ்ட வீராங்கனையுமான  சத்துரங்கி ஜயசூரிய சர்வதேச வலைப்பந்தாட்டப் அரங்கிலிருந்து விடைபெற தீர்மானித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு பிறந்த சத்துரங்கி தனது பாடசாலைக் காலத்தில் நீளம் பாய்தல், உயரம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளில் தனது திறமை வெளிப்பத்தியிருந்தார்.

பொழுதுபோக்குக்காக வலைப்பந்தாட்டப் போட்டிகளிலும் விளையாடி வந்த இவருக்கு, 2009 இல் இலங்கை அணி ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் சம்பியனாகியிருந்தமை இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது.

வலைப்பந்தாட்ட அணியின் பயிற்றுநரான ட்ரிக்ஸியின் பயிற்றுவிப்புன் கீழ் சிறந்த பயிற்சிகளைப் பெற்று சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தவே, இலங்கை விமானப் படையும் இவரை இணைத்துக்கொண்டது.

இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு 2010 ஆம் ஆண்டு காலடி வைத்த சத்துரங்க ஜயசூரிய கோல் டிபென்ஸ் மற்றும் கோல் காப்பு ஆகிய நிலைகளில் இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் விளையாடி இலங்கை அணியின் வெற்றிகளுக்கு பாரிய பங்களிப்பாற்றியிருந்தார்.

உலக கிண்ண வலைப்பந்தாட்டப் வரலாற்றில் மூன்று தடவைகள் (2011,2015,2019) பங்கேற்றுள்ள இவர் இம்முறை லிவர்பூலில் நடைபெற்ற உலக கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணிக்கு அணித்தலைவியாக செயற்பட்டார்.

2017 ஆம் ஆண்டு அணித்தலைவியாக பொறுப்பேற்ற சத்தரங்கி, 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட வல்லனர் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியை வழிநடத்தியிருந்தார். இதன்முலம் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர இலங்கை அணி ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டியில்சம்பியன் பட்டம் வென்றிருந்தது.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியிலிருந்து சத்துரங்கி ஓய்வு பெற்றாலும், இலங்கை விமானப்படை மற்றும் வர்த்தக அணிகளுக்காக தொடர்ந்தும் விளையாடவுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் ராணியாக விளங்கிய தர்ஜினி சிவலிங்கத்தின் ஓய்வுக்குப் பிறகு, இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்த சத்துரங்கி ஜயசூரியவின் ஓய்வும் இலங்கை வலைப்பந்தாட்டத்துக்கு பெரும் இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.