மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்த எதிர்பார்க்கின்றேன்-சஜித்

169 0

துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தி ஆட்சி நடத்துவதற்கு பதிலாக மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்த எதிர்பார்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பசறையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டுக்கு பெருமளவு அந்நிய செலாவனியை ஈட்டித்தரும் தோட்ட தொழிலாளர்கள் படும் வேதனையை எண்ணி வேதனை அடைவதாக கூறினார்.

குடும்பம் ஒன்று வாழ்வதற்கு மாதம் 55,000 தேவை என புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறுகின்றது அவ்வாறாயின் தோட்ட தொழிலாளர்கள் தமக்கு கிடைக்கும் சிறிய தொகையை சம்பளத்தில் எவ்வாறு வாழ்வார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

எனவே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆற்ற வேண்டிய பொறுப்பையும், கடமையையும் ஏற்றுக்கொள்வதாக சஜித் பிரேமதாச இதன்போது உறுதியளித்தார்.

மேலும் சண்டிதனமிக்க நிர்வாகத்தை நடத்துவதனை விடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி குடும்ப அரசியலை இல்லாது செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான நளின் பண்டார, ஹரீன் பெர்னாண்டோ, வடிவேல் சுரேஸ், பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த குமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.