டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் மட்டுமே உயிரிழப்பு; சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

211 0

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் மட்டும் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரி வித்தார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிர மாக உள்ளது. டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ள ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலின் தீவிரத் தால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கென்று தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அடங்கிய தனிக்குழுவினர் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவமனையில் ஆய்வு

இந்நிலையில் தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவ மனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், அவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிய அவர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து தண்டையார் பேட்டை திலகர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டார். அப்போது, மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசூதன் ரெட்டி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் க.குழந்தைசாமி, கூடுதல் இயக்குநர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பீலா ராஜேஷ் கூறும்போது, “தமிழகம் முழு வதும் டெங்கு காய்ச்சலால் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டு 100 பேர் சிகிச்சையில் உள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூர், திருவள்ளூர், சென்னையில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்குவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. டெங்குவுக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவு உள்ளன. டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகிறது. அதனால், தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையில்லாத மற்றும் உடைந்த பொருட்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.