எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் குறித்து ஐ.தே.க. விளக்கம்

299 0

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் முடிவுகளின் ஊடாக முழு நாட்டினதும் மக்கள் கருத்தை அளவிட முடியாது எனவும், அந்த தேர்தல் முடிவு என்பது ஒரு சிறு தொகுதி மக்களின் கருத்து எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வெற்றிகளைப் பெற்ற தேர்தல்களிலும் கூட பெந்தர, எல்பிட்டிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு குறைந்த வாக்குகளே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு போன்று பொதுஜன பெரமுனவுக்கு பெந்தர, எல்பிட்டிய தொகுகளில் கூடிய வாக்குப் பலம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் ஐ.தே.க.யிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.