24 மணித்தியாலயத்தில் 46 தேர்தல் வன்முறைகள் பதிவு

69 0

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடளாவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம் பெற்று வருகின்றன. 

இந்நிலையில் இதுவரை தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 46 அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நேற்று அதிகாலை முதல் பிற்பகல் 4.30 மணிக்குள் 46 முறைபாடுகள் தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அவற்றில் தேர்தல் சட்டதிட்டங்களை மீறியதாக 45 முறைபாடுகளும் , அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் முறைப்பாடொன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதேவேளை மாவட்ட தேர்தல்கள் விசாரணை நிலையங்களுக்கு தேர்தல் சட்மீறல் தொடர்பாக 16 முறைப்பாடுகளும் , வன்முறை தொடர்பாக முறைப்பாடொன்றும்மாக மொத்தம் 17 முறைப்பாடுகள் பற்றிய அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.