ஜனாதிபதி வேட்­பா­ளர்­க­ளுக்கு தேர்தல் ஆணைக்குழு முன்வைத்துள்ள 4 நிபந்தனைகள்

281 0

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள், நான்கு முக்­கி­ய­மான விட­யங்கள் தொடர்­பான சத்­தியக் கட­தா­சியை கட்­டாயம் சமர்ப்­பிக்க வேண்டும் என்று தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது.

இது­ தொ­டர்­பாக கட்­டுப்­பணம் செலுத்­திய வேட்­பா­ளர்கள் அனை­வ­ருக்கும், தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வால்   அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­ தொ­டர்­பாக தகவல் வெளி­யிட்ட தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் சட்ட பணிப்­பாளர் நிமால் புஞ்­சி­ஹேவ, “அர­சி­ய­ல­மைப்பு விதி­களை மீறக் கூடாது, எந்­த­வொரு அர­சாங்க நிறு­வ­னத்­து­டனும் வணிகச் செயற்­பா­டு­களில் ஈடு­படக் கூடாது, நெறி­முறைக் கோட்­பா­டு­க­ளின்­படி  செயற்­பட வேண்டும், தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் வழி­காட்டல் முறை­ களைப்  பின்­பற்ற வேண்டும் ஆகிய நான்கு அடிப்­படை விட­யங்­க­ளுக்கும் இணக்கம் தெரி­வித்து, வேட்­பா­ளர்கள் சத்­தி­யக்­க­ட­தா­சி­களைச் சமர்ப்­பிக்க வேண்டும்.

சுதந்­தி­ர­மான, நியா­ய­மான தேர்­தல்­களை நடத்­து­வதே இதன் நோக்­க­மாகும். அத்­துடன், வேட்பாளர்கள் தமது சொத் துக்கள் தொடர்பான விபரங்களையும் வேட்பு மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.