அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செலவீனங்களை 10 வீதத்தால் குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அவசியமற்ற திட்டங்கள் மற்றும் ஆரம்பிக்கப்படாத திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தளபாடங்கள் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதையும் தவிர்க்குமாறு இதன்போது கோரப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு உதவித் தொகை வழங்குவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.