சர்வதேச ஆசிரியர் தினம் பேர்லின் தமிழாலயம்.

358 0

சர்வதேச ஆசிரியர் தினம் (05.10.)இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனம் செய்துள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களிடையே என்றும் இணக்க சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான் , ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும் உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது .

ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது . படித்து பட்டம் பெற்றவனுக்கும் , படிக்காமல் பட்டறவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான் . ஆசிரியருக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மையுண்டு . உலகில் உள்ள பெரிய மனிதர்களாக இருக்கட்டும் சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இரு தரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார் .

அந்தவகையில் பேர்லின் தமிழாலய ஆசிரியர்களுக்கு நிர்வாகத்தின், பெற்றோர்களின் சார்பில் மாணவர்களால் மலர் வழங்கி நன்றி கூறப்பட்டது.புலம்பெயர் தேசத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் ஊட்டி கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.

தமிழாலயம் பேர்லின்
நிர்வாகம்