இந்து முறைப்படி சீன பெண்ணை மணந்த அதிராம்பட்டினம் வாலிபர்

335 0

201610281050191432_young-chinese-woman-who-married-according-to-hindu-rituals_secvpfதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்து முறைப்படி சீன பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (30). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
இவருடன் சீன நாட்டை சேர்ந்த டூயூலன் (26) என்பவர் பணிபுரிந்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

அவர்களது திருமணம் அதிராம்பட்டினத்தில் இந்து முறைப்படி நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

இது குறித்து மணமகள் டூயூலன் கூறியதாவது:-நானும் செந்தில் குமாரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்தோம். அப்போது அவருடன் பழகிய போது இந்திய கலாசாரம் மற்றும் தமிழ் கலாசாரம் பற்றி அறிந்து தமிழ் கலாசாரப்படி வாழ்வதற்காக அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன்.

இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கினோம். எங்களது காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மணமகன் செந்தில்குமார் கூறியதாவது:-நான் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக உள்ளேன். கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்.சொந்த ஊரில் இந்து முறைப்படி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்வதற்கு ஆசைப்பட்டோம்.

இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து கடந்த 22-ந் தேதி மகிழங்கோட்டைக்கு வந்தோம். பின்னர் தமிழ் முறைப்படி உறவினர்கள், நண்பர்கள் விருப்பப்படி அதிராம்பட்டினம் திருமண மண்டபத்தில் எங்கள் திருமணம் நடந்தது.

மேலும் சீனாவில் எனது மனைவி குடும்பத்தாரின் கலாசாரப்படி திருமணம் செய்து கொள்ள உள்ளோம். எனது மனைவிக்கு யாழினி என்று பெயர் வைத்து உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.