விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் ஓபிஎஸ் 6 நாட்கள் பிரச்சாரம்: தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் தலைவர்கள் படையெடுப்பு

317 0

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அக்.13 முதல் 18-ம் தேதி வரை 6 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக் கிறது. விக்கிரவாண்டியில் திமுக வுடனும், நாங்குநேரியில் காங்கி ரஸுடனும் அதிமுக மோதுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அந்தத் தொகுதிகளில் தற் போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அங்கு படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி அக்.12 முதல் 17-ம் தேதி வரை 6 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன் னீர்செல்வமும் இரு தொகுதி களிலும் 6 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளி யிட்ட அறிவிப்பில், ‘அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விக்கிரவாண்டி தொகுதியில், அக்.13, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் நாங்குநேரியில் அக்.15, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து பிரச் சாரம் மேற்கொள்கிறார்’ என கூறப்பட்டுள்ளது.