நாங்குநேரியில் சூடுபிடிக்கிறது தேர்தல் பிரச்சாரம்!

418 0

நாங்குநேரி தொகுதி இடைத்தேர் தலுக்கான பிரச்சாரம் சூடுபிடிக் கத் தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக 11 அமைச்சர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். காங்கிரஸ் வேட் பாளருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் வாக்கு சேகரிக்கிறார்கள்.

நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21-ம் தேதி நடைபெறு கிறது. இத்தேர்தலில் வெ.நாராய ணன் (அதிமுக), ரூபி மனோக ரன் (காங்கிரஸ்) உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார் கள். இதனால் தேர்தலின்போது 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களை பயன்படுத்த வேண்டி உள்ளது.

தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்குசேகரிப் பில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களும், கட்சியினரும் ஈடுபட்டு வருகிறார் கள்.

அதிமுக தலைமை தேர்தல் அலுவலகம் நாங்குநேரி டோல்கேட் அருகே திறக்கப்பட்டுள்ளது. விழா வுக்கு, அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.

அமைச்சர்கள் ராஜலெட்சுமி, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு உள்ளிட்ட 11 அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையடுத்து, நேற்று மாலையில் வேட்பாளர் நாராயணன் சீவலப்பேரி துர்க்கை அம்மன் கோயி லில் சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவு கேட்டு 11 அமைச்சர்கள் கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கனிமொழி

காங்கிரஸ் கட்சி தேர்தல் அலுவல கத்தை களக்காட்டில் திமுக மகளி ரணி செயலாளர் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். தொடர்ந்து, கனிமொழியுடன், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், திமுக கிழக்கு மாவட் டச் செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஞான திரவியம் எம்.பி., காங்கிரஸ் கட்சி யின் மாவட்ட தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக் களிக்க நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், இத்தொகுதிக்கு உட் பட்ட பல்வேறு இடங்களில் போலீ ஸார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறார்கள்.

முதல்வர், ஸ்டாலின் வருகை

வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்கி ரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகி யோர் பிரச்சாரத்துக்கு வரவுள்ளனர்.