தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்!

311 0

தகவல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை, எல்காட் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை (பிக்கி) சார்பில், ’தகவல் தொழில்நுட்பம் வழியாக மக்களை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பி லான கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கை தமிழக வரு வாய் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் தகவல் தொழில் நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும். அதற்கான திட்டம், திறன் ஆகியவை நம்மிடம் உள்ளது.

ஐநா சபை பாராட்டு

வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் உருவாக்கிய ‘TN SMART’ செயலியை ஐநா சபையே பாராட்டியுள்ளது. அதே போல் விவசாயிகள் ‘உழவன் செயலி’ மூலம் எப்போது மழை வரும், எப்போது பயிர் செய்யலாம் என்ற தகவல்களை அறிந்து கொள் கின்றனர்.

தமிழகம் தகவல் தொழில்நுட்பத் தில் முன்னோடி மாநிலமாக வரும். அதற்கு மக்களை தகவல் தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந் தவர்களாக மாற்ற வேண்டும். அதே நேரம் இன்றைய காலகட்டத்தில் உள்ள சவால்களையும் நாம் எதிர் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு செயலர் கள் எஸ்.கிருஷ்ணன் (நிதி), சந் தோஷ் பாபு (தகவல் தொழில் நுட்பம்), ககன்தீப்சிங் பேடி (வேளாண்மை), பிரதீப் யாதவ் (பள்ளிக்கல்வி), மதுமதி (சமூக நலம்), மின்னாளுமை நிறுவன தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் கே மிஸ்ரா, எல்காட் மேலாண் இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.